அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டம்!
Anganwadi workers protest outside Collectors office
திருவள்ளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.அப்போது இரவு கலெக்டர் அலுவலக வாசலிலேயே பெண்கள் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எனவும் ஆண்டுதோறும் கோடை விடுமுறை மே மாதங்களில் 15 முதல் 30 நாட்கள் அளிக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முன்னோடியாக இவர்களுக்கு கோடை விடுமுறை 15 நாட்கள் அதாவது மே மாதத்தில் விடப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த மாதமே விடுமுறை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தமிழ்நாடு அரசின் சார்பில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை மே மாதத்திற்கான விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள காவல்துறை அங்கு பந்தல் அமைக்கவும் அனுமதி மறுத்ததால் 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடும் வெயிலில் குடைகள் மற்றும் தாங்கள் வைத்திருந்த பேனரை தலைமீது வைத்து கடுமையான சிரமத்திற்கு மத்தியில் தற்பொழுது ஈடுபட்டனர்.
மேலும் இந்த காத்திருப்பு ஆர்ப்பாட்டமானது அரசின் சார்பில் மே மாதத்திற்கான கோடை விடுமுறை அளிக்கும் வரை தொடரும் எனவும் தெரிவித்த அங்கன்வாடி ஊழியர்கள் வீட்டிற்கு செல்லாமல் கலெக்டர் அலுவலக நோய்க்கு வாயிலில் படுத்து போராட்டத்தை தொடர்ந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வி அதிமுக ஆட்சியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேர்வு கிடைக்குமா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. அங்கன்வாடி ஊழியர்களஇன் காத்திருப்புப் போராட்டத்தை தொடர வேண்டுமா அல்லது முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா என்பதை தமிழ்நாடு அரசே முடிவு செய்ய வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.
English Summary
Anganwadi workers protest outside Collectors office