அச்சத்தில் மக்கள்!!! அமெரிக்காவில் நிலநடுக்கம்...ரிக்டர் அளவு 5.2 ஆக பதிவானது...!
Earthquake in America 5point2 on Richter scale
அமெரிக்கா நாட்டின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 புள்ளிகளாக பதிவானதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இதனால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர்.
இதேபோல், நியூ மெக்சிகோ ஒயிட்ஸ் நகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.
ஆனால் மக்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Earthquake in America 5point2 on Richter scale