போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் கிருஷ்ணா,ஸ்ரீகாந்த் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா?
Will actors Krishna and Srikanth get bail drug case
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைத்துறையினரான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் ஏற்கனவே கைதாகி சிறையில் ரிமாண்டில் உள்ளனர்.

போதைப்பொருள் குறித்து இவர்களிடம் காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே,ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரின் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
Will actors Krishna and Srikanth get bail drug case