அடேங்கப்பா! ஆலியா பட்டிடம் பண மோசடி செய்த உதவி பணியாளர் கைது...! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் 'ஆலியா பட்'. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.இதில் நடிகை ஆலியா பட்டிடம் 2001 முதல் 2004 வரை 32 வயதான 'வேதிகா பிரகாஷ் ஷெட்டி' என்பவர் தனி உதவியாளராக பணியாற்றினார்.

இந்நிலையில் நடிகை ஆலியா பட்டின் தாயாரும், முன்னாள் நடிகையும் இயக்குனருமான சோனி ரஸ்தான், வேதிகா பிரகாஷ் ஷெட்டி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஜூஹூ காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இந்த குற்றவியல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேதிகா பிரகாஷ் ஷெட்டியின் மீது காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்துள்ளார். மேலும், போலி பில்களை தயாரித்து, அதை உண்மையானதாக காட்ட நவீன தொழில் நுட்பமுறைகளை பயன்படுத்தியுள்ளார்.இதில் ஆலியா கையெழுத்திட்டப் பிறகு, அந்த தொகை வேதிகாவின் நண்பரின் கணக்கிற்கு மாற்றப்பட்டு பிறகு அவரது கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் காவலில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட வேதிகா தலைமறைவானார். அதுமட்டுமின்றி, அவர் ராஜஸ்தான், கர்நாடகா, புனே, பெங்களூரு என தொடர்ந்து இடங்களை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார்.

தொடர்ந்து வேதிகாவை கண்காணித்து வந்த காவலர்கள் பெங்களூருவில் பதுங்கி இருந்த அவரை தற்போது கைது செய்தனர். மேலும், அவரை மும்பைக்கு அழைத்து வந்து தொடர்ந்து அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adengappa Alia Bhatts assistant arrested for defrauding her money


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->