ஏமனில் இஸ்ரேலிய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள்..! - Seithipunal
Seithipunal


ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி பிரதமர் அஹமது அல்-ரஹவி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
கடந்த ஆகஸ்ட் 28 தேதி அன்று இஸ்ரேலிய ராணுவத்தால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹூத்தி பாதுகாப்பு அமைச்சர் முகமது அல்-அடிபி மற்றும் தலைமைப் பணியாளர் முகமது அப்த் அல்-கரீம் அல்-காமரி உள்ளிட்ட பல உயர்மட்ட ஹூத்தி அதிகாரிகளும் கொல்லப்பட்டதாகத் கூறப்படுகிறது.

இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தும் பணியில் இஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, இஸ்ரேலிய ராணுவப் படைகள் (IDF) அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளதாவது: யேமனின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹூத்திகள், ஈரானின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதாகவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்ததாகக் கூறியுள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு எதிராகக் கை உயர்த்தினால், அவர்களின் கை துண்டிக்கப்படும் என்று ஹூத்திகளுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

கடந்த 2024 ஆகஸ்ட் முதல் அஹமது அல்-ரஹவி, ஹூத்தி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராகப் பணியாற்றினார். ஏமன் நாட்டைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பு பல கொலை முயற்சிகளைச் சந்தித்துள்ளார். இந்நிலையில், இந்தத் தாக்குதல் ஹூத்தி தலைமைத்துவத்தின் மிக உயர்ந்த மட்டத்தை இஸ்ரேல் குறிவைத்துள்ளதால், மோதலின் தீவிரத்தை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Houthi Prime Minister and key leaders killed in Israeli airstrike in Yemen


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->