சிறுவர்கள் சாப்பிட்ட அழுகிய முட்டை..! பள்ளி அதிகாரிகள் மீதான விசாரணை தீவிரம்..! - Seithipunal
Seithipunal


நீலகிரி கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 35 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.இந்நிலையில், எப்போழுதும் போல்  மாணவர்களுக்கு சத்துணவாக வேகவைத்த முட்டை வழங்கப்பட்டுள்ளது.

அப்போது சில முட்டைகளின் உள்ளே கருப்பு நிறத்தில் அழுகிய நிலையில் இருந்தது போல் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதைக் கண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் அதிருப்தியடைந்தனர்.

மேலும், ஒருவர் அந்தக் காட்சியை வீடியோ எடுத்து இணையத்தில்  பதிவிட்டதோடு, சத்துணவு திட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து உடனடியாக, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் 'அனிதா' உத்தரவின் பேரில்,  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு திட்டம்) பாபு  ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பிறகு முட்டைகளை தண்ணீரில் போட்டு, மறுபடியும் வேகவைத்து சோதனை செய்தனர். அதில் அழுகிய முட்டைகள் எதுவும் இல்லை என்பது உறுதியானது. முட்டைகள் நீண்ட நேரம் அதிகமாக வேகவைத்ததால் நிறம் மாறியுள்ளது என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rotten eggs eaten by children Investigation into school officials intensified


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->