சென்னையில் மேகவெடிப்பு! நள்ளிரவில் கொட்டி தீர்த்த பேய்மழை! வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!
Chennai cloud burst Rains
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்தது. அதற்கிடையில், சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு 11 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது.
எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டன. சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது.
இந்த கனமழைக்கு காரணம் மேகவெடிப்பு என்று வானிலை மையம் விளக்கியுள்ளது. குறிப்பாக மணலி, விம்கோ நகர், கொரட்டூர் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் மேகவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதனால் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவானதாகவும் கூறப்பட்டது.

விம்கோ நகர் பகுதியில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ. மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்தப்பகுதிகளில் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது.
மேகவெடிப்பு காரணமாக ஏற்படும் திடீர் கனமழை, குறிப்பாக நகரப் பகுதிகளில் குடியிருப்போருக்கு சிரமங்களை உண்டாக்குவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Chennai cloud burst Rains