'ஒரு கவுன்சிலர் , எம்.எல்.ஏ. கூட ஆகல.., அவரை தோற்கடித்து விடுவேன்; இவர் எனக்கு எதிரி' என விஜய் கூறுவது பக்குவமில்லாத தனம்'; நயினார் நாகேந்திரன் பதிலடி..!
Nayinar Nagendran retorts that Vijay's speech shows immaturity
தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் நடிகர் விஜய் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளார். முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போதும் கொள்கை அளவில் பாஜக எதிரி என்று தெரிவித்திருந்தார். அக்கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். அடுத்து, மதுரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 02-வது மாநாட்டிலும் இதே கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, த.வெ.க. தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய், பாஜக-வை கொள்கை எதிரி என்று கூறியமை மற்றும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளமை குறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது: யாருடைய சுற்றுப் பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு மாநாடு நடத்திவிட்டு எதிரி என பேசுவதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிருபர்களை பார்த்து, நீங்கள் கூட கட்சி ஆரம்பிக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விஜய் இதுவரை, ஒரு கவுன்சிலர் கூட ஆகல.., ஒரு எம்.எல்.ஏ. கூட ஆகல.., அவரை தோற்கடித்து விடுவேன்; இவர் எனக்கு எதிரி' என கூறுவது பக்குவமில்லாத வார்த்தையாகத்தான் கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக 300-க்கு மேற்பட்ட எம்.பி.க்களை வைத்துள்ள கட்சி. உலக புகழ் வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட கட்சி. ஒரு மாநாடு நடத்திவிட்டு எதிரி என பேசுவதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று நயினார் நாகேந்திரன் மேலும் பேசியுள்ளார்.
English Summary
Nayinar Nagendran retorts that Vijay's speech shows immaturity