2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சசிகாந்த் செந்தில் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வலியுறுத்தி திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். திருவள்ளூரில் அவர் 02-வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தின்போது சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP Sasikanth Senthil who was on a hunger strike admitted to the hospital


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->