அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி! நேருக்கு நேர் மோதி கொண்ட 2 லாரிகள்...! 3 பேர் பலி
Shock in Aruppukottai 2 trucks collide headon 3 people killed
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி கடுமையான விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும், விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shock in Aruppukottai 2 trucks collide headon 3 people killed