அவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு!
Aadhaar is definitely mandatory for them Central Government announcement
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அதிகரிக்க தொழிற்பயிற்சி அளிப்பதுதான் இதன் நோக்கம் ஆகும் .
இந்நிலையில், இத்திட்டத்தில் பயனாளிகள் போக்குவரத்து படி, தங்குமிட படி, போக்குவரத்து படி உள்ளிட்ட பணப்பலன்களை பெற ஆதார் கட்டாயம் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.இதனால் மாற்றுத்திறனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமல்லாமல் ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதாருக்கு விண்ணப்பித்த ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆதார் இல்லாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வசதியாக ஆங்காங்கே ஆதார் பதிவு முகாம்கள் நடத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, பிறப்பு சான்றிதழ், பள்ளி ஆவணங்கள் போன்றவை மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
English Summary
Aadhaar is definitely mandatory for them Central Government announcement