இது அருவருப்பானது.. வாலிபருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய நிருபர்!
This is disgusting The reporter exposed a famous actress who went on a date with a teenager
ஓரு பெரிய நட்சத்திரமாகத் தெரான் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது அருவருப்பானது. அவர் இன்னும் கற்று தேறவேண்டும்” என நிருபர் மெகின் கெல்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் மாடலான சார்லீஸ் தெரான், சமீபத்தில் நிருபர் மெகின் கெல்லி தொகுத்த டாக் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில், தனது டேட்டிங் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்ததால் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெரான், 29 வயது வாலிபருடன் டேட்டிங் சென்ற அனுபவம் குறித்து பேசியதோடு, சமீபத்தில் 26 வயது வாலிபருடன் ஒரு நாள் உறவு வைத்த அனுபவம் குறித்து, “மிகவும் ஆச்சரியமளிக்கும் மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது” என கூறினார்.
“இந்த அனுபவம் எனக்குப் புதிது. என்னுடைய 40 வயதில் தான் இந்த வகை சுதந்திரத்தை உணர்ந்தேன். இது நான் என் 20-வயதில் அனுபவிக்க வேண்டிய விஷயம். ஆனால் அப்போது நான் திருமணமாகிவிட்டேன், குழந்தைகளும் இருந்தார்கள்,” என அவர் கூறினார்.
அத்துடன், “மொத்த வாழ்க்கையில் மூன்று முறை மட்டும் முன்பே தெரியாத ஆண்களுடன் உறவில் இருந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டிக்கு பதிலளித்த மெகின் கெல்லி, “ஒரு பெரிய நட்சத்திரமாகத் தெரான் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது அருவருப்பானது. அவர் இன்னும் கற்று தேறவேண்டும்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெரான், முன்னதாக ஹாலிவுட் நடிகர் சீன் பெனுடன் 2013 முதல் 2015 வரை உறவில் இருந்தார். தற்போது தனது தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்ததற்காக அவர் மீது வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
English Summary
This is disgusting The reporter exposed a famous actress who went on a date with a teenager