Starlink -ன் ஒழுங்குமுறை ஆணையத்தை அனுமதித்தது இந்திய விண்வெளி
Indian Space Research Organisation approves Starlinks regulatory body
இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் (INSPAC) , எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம்' இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென்1 (Gen1) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இது ஜூலை 8 முதல் தொடங்கும் இந்த 5 ஆண்டு கால அனுமதி, இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையத்தை கொண்டு செல்லும் ஒரு முக்கிய படியாகும்.
இருப்பினும், அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளையும் பெற்ற பின்னரே ஸ்டார்லிங்க் சேவைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
அதுமட்டும்மின்றி இது, இந்தியாவின் விண்வெளித் துறையைத் தாராளமயமாக்குவதற்கும், டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian Space Research Organisation approves Starlinks regulatory body