மதுக்கடைக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்...! - விளக்கம் கொடுத்து தமிழக அரசு - Seithipunal
Seithipunal


தமிழக அரசு அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் பூஜை செய்ய வைத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. இதில் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த நோக்கம் என்று பலர் தெரிவின்றனர்.

இதுதான் திராவிட மாடலா? என்று குறிப்பிட்டு பலரும் அதனை பல இணையதள செயலிகளில் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு:

இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. அர்ச்சகர் பூஜை செய்த வீடியோவில் உள்ளது டாஸ்மாக் கடை அல்ல.

மேலும் அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரும் இல்லை. கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பகிரப்பட்டு வரும் இந்த பழைய வீடியோவை திரித்து வதந்தி பரப்பிவருகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priest performing puja at a liquor shopTamil Nadu government gives explanation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->