ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
AIADMK inaugurates Neer Mor pandal in Andipatti
ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற நூற்றுக்கனக்கானோர் நீர் ,மோர் , தர்பூசணி பழங்களை மகிழ்ச்சியுடன் வாங்கி பருகிச் சென்றனர்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வெப்ப அலை வீசி வருகிறது.இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் கூலித்தொழிலாளர்கள் ,இருசக்கரத்தில் வாகனத்தில் செல்வோர் ,பாதசாரிகள் வெயிலால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ,நாடு முழுவதும் அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள் .
அதில் ஒரு அம்சமாக ஆண்டிபட்டியில் வைகை சாலை பிரிவு எம்ஜிஆர் சிலை அருகே நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் . கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற நூற்றுக்கனக்கானோர் நீர் ,மோர் , தர்பூசணி பழங்களை மகிழ்ச்சியுடன் வாங்கி பருகிச் சென்றனர். நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
AIADMK inaugurates Neer Mor pandal in Andipatti