அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்..உச்சி வெயிலில் நடமாடுவதை தவிர்க்க அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 42, 43 டிகிரி செல்சியசாக வெயிலின் அளவு உயரக் கூடும் என  தனியார் வானிலை கணித்துள்ளது.

 வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயில் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில்தான், கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. மழை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 வானிலை நிகழ்வுகளுக்கு மத்தியில்தான் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலம் என்பது 24 நாட்கள் ஆகும். இது  3 பகுதியாக பிரிக்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் அளவிடப்படுகிறது. 

அந்த வகையில், இம்மாதம் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும். இம்மாதம் 28-ந் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது.  இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் உச்சி வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும்.மையப் பகுதியில் வெயில் உச்சத்தை அடையும்.

தற்போது வரை தமிழகத்தில் வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 42, 43 டிகிரி செல்சியசாக வெயிலின் அளவு உயரக் கூடும். அதன்பிறகு, வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Agni Nakshatra begins today Advice to avoid walking in the sun


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->