இன்று நீட் தேர்வு எழுந்த இருந்த மாணவி தற்கொலை! ஒரே ஆண்டில் 14-ஆவது உயிரிழப்பு!
Rajasthan NEET Student death
இன்று (மே 4) நடைபெற உள்ள நீட் தேர்வை முன்னிட்டு கோட்டாவில் பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவரின் தற்கொலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்த 17 வயது மாணவி, நேற்றிரவு (மே 3) சுமார் 9 மணியளவில் தன்னுடைய அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவம் தெரிய வந்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையை தொடர்புகொண்டனர். போலீசார் உடனடியாக விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவியின் தற்கொலைக்கு தேர்வு மனஅழுத்தமே காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு பதிந்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய பயிற்சி மையமாக இருக்கும் கோட்டாவில், மாணவர்கள் இடையே அதிகப்படியான மனஅழுத்தம் காணப்படுவதால் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன.
இந்த ஆண்டில் மட்டும் இதுவே 14-ஆவது மாணவர் தற்கொலை என காவல் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் கயல்விழி என்ற மனைவி ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rajasthan NEET Student death