நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - உயர்நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
tomorrow judgement of actors sri kanth and krishna bail case
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், இருவருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது 8-ந்தேதி அதாவது நாளைக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
English Summary
tomorrow judgement of actors sri kanth and krishna bail case