தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது - திருமாவளவன் அதிரடி பேச்சு.!!
thirumavalavan say election promised not fulfilled 100 percent
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- "இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தி உள்ளோம். இவர் ஒரு திராவிட அரசியலின் முன்னோடி; நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்; அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த மாமனிதர்.

ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு சமூகநீதி விடுதி என்று பெயரை மாற்றம் செய்து அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.
தேர்தல் நெருங்கி வரும்போது களப்பணிகளை தீவிரப்படுத்துவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணி. அதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தே தேர்தலை சந்திப்போம். புதிய மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது. ஆனால், பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியுள்ளது.. முக்கிய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
thirumavalavan say election promised not fulfilled 100 percent