விடுதலைப் போராட்ட வீரர்கா.மு.ஷெரீப் அவர்கள் நினைவு தினம்!.
Today is the remembrance day of the freedom fighter KM Shareef
விடுதலைப் போராட்ட வீரர், தேசிய கவிஞர், புகழ்பெற்ற பாடலாசிரியர் திரு.கா.மு.ஷெரீப் அவர்கள் நினைவு தினம்!.
கவி கா.மு.ஷெரீப் (காதர்ஷா முகமது ஷெரீப், ஆகஸ்ட் 11, 1914 - ஜூலை 7, 1994) கவிஞர், திரைப்பாடல் ஆசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்படக் கதாசிரியர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், சொற்பொழிவாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர். தமிழ் வளர்ச்சிக்காக ‘தமிழ் முழக்கம், ‘சாட்டை’ போன்ற இதழ்களை வெளியிட்டவர். ம.பொ. சிவஞானம் அவர்களின் ‘தமிழரசு கழக’த்துடன் இணைந்து தமிழ், தமிழர் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.
இலக்கியத்துக்கு நிகராக நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’ என்கின்ற பாடலைக் கிராமப் புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு, அவர்கள் அந்தப் பாட்டிலே, ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப் படைந்திருக்கிறேன்...' இதுதான் கலைஞர் தன் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியில் கவிஞர் செரீப் அவர்களுக்கு தந்த பாராட்டுரை.
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த தமிழறிஞர் கவி.கா.மு . செரீப் அவர்கள்
தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு வி க விருது, கம்பன் கழக விருது,போன்ற எண்ணற்ற விருதுகளையும் பெற்ற காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர் 1994 ல் ஜூலை 7 ல் தனது 79 வயதில் மண்ணுலகை விட்டு மறைந்தார்.
English Summary
Today is the remembrance day of the freedom fighter KM Shareef