நடிகை சார்மியின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!
The shooting of Vijay Sethupathis new film produced by actress Charmi begins
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருடைய இயல்பான நடிப்பால் வருடத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் 'ஏஸ்' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து 'டிரெயின், தலைவன் தலைவி' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ள நிலையில், படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி-பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாக உள்ள இப்படத்தின் மீது அதிகரித்துள்ளது.
English Summary
The shooting of Vijay Sethupathis new film produced by actress Charmi begins