'செல்போனை உயர்த்திப் பிடிப்பது போல செம்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்': அமைச்சர் அன்பில் மகேஷ்..! 
                                    
                                    
                                   Minister Anbil Mahesh urges us to uphold our classical language
 
                                 
                               
                                
                                      
                                            2024-2025-ஆம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மற்றும் ஐஜிசிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் 3565 தமிழாசிரியர்களுக்கு பயிற்சி முகாம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.
இந்த புத்தாக்கப் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: 
தமிழாசிரியர்களுக்காக இன்று தொடங்கும் இந்த புத்தாக்கப் பயிற்சியில் தமிழ் இலக்கணம், பாடப்பொருள், செய்யுள், உரைநடை மதிப்பீடு என்கிற வகையில் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றும், தனியார் பள்ளி சார்ந்த மாணவ, மாணவியரும் நம்முடைய குடும்பம் தான் என்ற வகையில் தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-aerzd.png)
அத்துடன், இருமொழிக் கொள்கையை சட்டமாக்கிய அண்ணா  நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் பொருத்தமாக இருக்கிறது துன்று பேசிய அவர், கடந்த ஆண்டும் இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி எட்ன்றும் பேசியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப நாம் தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றும், பிற தொழில் நுட்பங்கள், கருவிகள் மூலம் கற்பதை விட ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையின் மூலம் பாடம் நடத்தும் போது கற்றுக்கொள்வதைப் போல வேறு எதுவும் நமக்கும் பெரிய பயனுள்ளதாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
-4wfje.png)
அத்துடன், எந்த தொழில் நுட்பத்தினாலும் அதை கொடுத்துவிட முடியாது எனவும், நமது தமிழ் மொழியை நாம் உயர்த்திப் பிடித்தே ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நமது தாய் மொழி இல்லாமல் போய்விட்டால் நாம் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை இழந்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நமது தமிழ் மொழி எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக கீழடி, கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உணர்த்துகின்றன. 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பைத் தமிழன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற பெருமையை நாம் பார்த்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 08-இல் உள்ள 22 மொழிகளையும் படிக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நமக்கு செல்போன் முக்கியமாகத் தோன்றுகிறது. இவ்வாறு செல்போனை உயர்த்திப் பிடிக்கும் நாம் செம்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Minister Anbil Mahesh urges us to uphold our classical language