கோவை கொடூரம்: மூன்று பேரை சுட்டு பிடித்த போலீசார்!
coimbatore case police gun shoot
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூன்று இளைஞர்கள் திடீரென தாக்கி கடத்திச் சென்றனர்.
பின்னர், தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்தனர். குற்றச்செயலுக்குப் பிறகு, அவரை அருகிலுள்ள தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்து விட்டு தப்பி ஓடியனர்.
அதிகாலையில் மாணவி மயக்கநிலையிலிருந்து மீண்டு உதவி கேட்டு அழைத்தபோது, அங்கிருந்தவர்கள் தகவல் அளித்ததையடுத்து பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டனர். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, மக்களிடையே கோபத்தையும், பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதே சமயத்தில் சம்பவம் தொடர்பாக போலீசார் உடனடியாக விசாரணை ஆரம்பித்தனர். அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், குற்றவாளிகள் குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டனர்.
பின்னர், தனிப்படை போலீசார் மொத்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு, துடியலூர் பகுதியில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தனர். அவர்கள் போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் காலில் சுட்டதில் மூவரும் காயமடைந்தனர்.
காயமடைந்த குற்றவாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
coimbatore case police gun shoot