ரிதன்யா தற்கொலை வழக்கு: கணவர், மாமனார், மாமியார் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


வரதட்சணை கொடுமையால் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புதுப்பெண் ரிதன்யா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு முன் அவர் தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ வெளியாகி வைரலானது. ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். அத்துடன், மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இந்த வழக்கு தொடர்பில் அவரது கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை கடந்த 05-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், கணவர் கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் ஜாமின் மீதான விசாரணையை 07-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதன் போது, ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court rejects bail applications of husband and father inlaw in Rithanya suicide case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->