உல்லாச வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகர்..போலீசார் செய்த தரமான சம்பவம்!
Congress leader released a sensational video Police handled the incident well
காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகர் அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாலிகிராமம் டவுன் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் லோகித்அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணை லோகித் காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வருவதை அறிந்த பெண்ணின் பெற்றோர் பெண்ணிற்கு வேறொரு இடத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
இந்தநிலையில், தீபாவளி பண்டிகைக்கு அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த நிலையில் இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை லோகித் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவை பார்த்து பெண் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் சாலிகிராமம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணும், லோகித்தும் காதலித்த நேரத்தில் ஒரு தோட்டத்தில் வைத்து இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அதனை லோகித் மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். தனக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்காததால் லோகித் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து லோகித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
English Summary
Congress leader released a sensational video Police handled the incident well