பதவியில் இருந்து அதிரடி நீக்கம்: தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள ரஷ்யா அமைச்சர்..!
Dismissed Russian minister commits suicide by shooting himself
கடந்த மூன்று 03 வருடத்திற்கு மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றதால் விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனால், விமான வழி போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக நீக்கினார்.
-4uhde.png)
அமைச்சர் பதவியில் இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட் நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், அவர் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரோமன் ஸ்டாரோவாய்ட் கடந்த வருடம் மே மாதம் தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட்டுள்ளார். அதற்கு முன்னர் அவர் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் ஆளுநராக செயல்பட்டுள்ளார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த அவர், நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Dismissed Russian minister commits suicide by shooting himself