செட்டிநாட்டு ஸ்டைலில் சுழியம் செய்வது எப்படி?
how to make chettinad style suzhiyam
தேவையான பொருட்கள்:-
அரிசி
உளுந்து
கடலைபருப்பு
தேங்காய் துருவல்
ஏலக்காய் பொடி
உப்பு
சக்கரை
நெய்
எண்ணை
செய்முறை:-
முதலில் அரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து ஒரு மிக்ஸியில் நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடலை பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு வாணலை வைத்து சூடானதும் நெய் ஊற்றி வெல்லம், உப்பு, வேகவைத்த பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி கெட்டியான பதம் வந்தவுடன் இறக்க வேண்டும்.
கை சூடு பொருக்கும் அளவில் இருக்கும் போது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டையை அரைத்து வைத்திருக்கும் அரிசி உளுந்து மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சுழியம் தயார்.
English Summary
how to make chettinad style suzhiyam