தொடர் மர்ம மரணங்கள்: அமானுஷ சடங்குகள் செய்வதாக சந்தேகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேரை கொன்று எரித்த கிராம மக்கள்; நிர்கதியான குழந்தை..!
Villagers in Bihar kill and burn 5 members of the same family on suspicion of performing supernatural rituals
பீகாரில் அமானுஷ்ய சடங்குகள் செய்ததாக ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்த ஐந்து பேரை, கிராமத்தினர் ஒன்று கூடி, அவர்களை கொடூரமாக அடித்துக் கொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பூர்ணிமா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்மமாக முறையில் மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் அமானுஷ்ய சடங்குகள் செய்வதுதான் காரணம் என கிராம மக்கள் நம்பி அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதனைதொடர்ந்து, திட்டமிட்டபடி, நேற்று கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பாபுலால் ஒரான், சீதா தேவி, மஞ்ஜீத் ஒரான், ரானியா தேவி, டாப்டோ மொஸ்மாத் ஆகிய 05 போரையும் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு ஆத்திரம் தீராததால் அவர்களை எரித்துள்ளனர்.
ஆனால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று எப்படியோ தப்பித்துள்ளது. பின்னர் போலீசில் தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடுமையை அந்த குழந்தை தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த குழந்தையால் மேற்கொண்டு விவரித்து கூறமுடியவில்லை.

அத்துடன், தனது குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளது. இதனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளதால், கிராமத்தினர் வீடுகளை காலி செய்து வெளியேறியுள்ளனர். இதனால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிராம மக்களை தூண்டிவிட்டதாக நகுல் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Villagers in Bihar kill and burn 5 members of the same family on suspicion of performing supernatural rituals