அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யாமல் இருப்பதற்கு காரணம்: விளக்கமளித்துள்ள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி..! - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்யாமல் இருந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர்கள் தற்போது இருக்கும் வீட்டில் உள்ள சாமான்களை பேக் செய்துவிட்டதாகவும், அதில் சில சாமான்கள் ஏற்கனவே புதிய வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சில இங்கே ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குடியிருப்பில் நீண்ட காலம் தங்கியதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார். மேலும், சக்கர நாற்காலி செல்லும் அளவிற்கு ஏற்ற வீடு தேவைப்படும் தனது மகள்களின் உடல்நிலையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், அவர்கள் இரண்டு குழந்தைகளின் பெற்றோர் என்றும்,அவர்களது பிள்ளைகளான  பிரியங்கா மற்றும் மஹி மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு சிறப்புத் தேவைகள் உள்ளன என்றும் அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு குறைபாடு உள்ளதால், அவர்களது எலும்பு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு காரணமாக வீட்டில் கூட, அதிக சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டடிய கட்டாயத்திலோ உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களைக் கவனித்துக் கொள்ள செவிலியர் உள்ளளவும், வீட்டு வேலைகளைத் தொடரத் தயாராக இருப்பதாக தங்கத்திடம் சொன்னவுடன்  இடம்பெயர்ந்து விடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வாறான காரணங்களுக்காக, இன்னும் இரண்டு நாட்கள் தொடங்கி அதிகபட்சம் இரண்டு வாரங்களில் இடம்பெறந்து விடுவோம் என்றும் அறிவித்துள்ளார். 

இதவேளை, ஜனவரி 2021 மற்றும் 2022 இல், தனது மூத்த மகள் பிரியங்கா சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் 44 நாட்கள் ஐசியுவில் சிகிச்சை பெற்றதையும் சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா மற்றும் மஹி சந்திரசூட்டின் வளர்ப்பு மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Chief Justice of the Supreme Court explains reason for not vacating official residence


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->