ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் புதிய கட்சிக்கு எதிராக 'பகுஜன் சமாஜ்' வழக்கு..!
Bahujan Samaj files case against Armstrong wife Porkoti new political party
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. ஆம்ஸ்ட்ராங் மனைவியும், தென்னிந்திய புத்தவிகார் தலைவருமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடைபெற்றது.
அத்துடன், ஆம்ஸ்ட்ராங்கின் சிலை திறப்பு விழா நடைப்பெற்றதோடு, நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
-z8brq.png)
அதன் பின்னர். ஆம்ஸ்ட்ராங் மனைவி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்து, கொடியை அறிமுகம் செய்தார். அப்போது, தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' கொடியை 32 அடி உயர கம்பத்தில் பொற்கொடி ஏற்றி வைத்தார்.
யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வது போல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், த.வெ.க. கொடியில் யானை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்தது.
-l2rcl.png)
இதன்போது, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது, அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்தது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Bahujan Samaj files case against Armstrong wife Porkoti new political party