05 லட்சம் பக்தர்கள் வருகை: 'திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல': அமைச்சர் சேகர் பாபு பேட்டி..! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன் பின்னர் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. அதன்படி, இன்று அதிகாலை 12-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று , விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவிலில் அதிகாலை 04 மணி அளவில் 12-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்து, காலை 06.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டி, கோவிலில் 09 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அங்கு பேட்டி அளித்தார். திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு சுமார் 05 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பஇவர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல. இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Shekhar Babu says 5 lakh devotees will attend Tiruchendur Kumbabhishekam ceremony


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->