மோடியின் 75-வது பிறந்தநாள்! – உலகத் தலைவர்களிலிருந்து எதிர்க்கட்சியினர் வரை குவியும் வாழ்த்து...!
Modis 75th birthday Wishes pouring from world leaders opposition parties
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) தனது 75-வது பிறந்தநாளை மிக சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். அவருக்கு உலகத் தலைவர்களும், தேசிய, மாநில அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு வருவதற்கான முக்கிய காரணமாக விளங்கும் மோடியின் பிறந்தநாளை, கட்சி முழுவதும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களிலும், நாடு முழுவதும் பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மேலும்,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதல், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டதாவது,"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்” என குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி:
காங்கிரஸ் மூத்த தலைவர் தனது எக்ஸ் பதிவில்:
“பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன்:
அதேபோல, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாழ்த்தில்:
“பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல உடல்நலம், மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
English Summary
Modis 75th birthday Wishes pouring from world leaders opposition parties