சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்ற விஜய் பிரசார அனுமதி மனு! - ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு!
Vijays campaign permission petition goes trial Chennai High Court Fans eagerly waiting
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், செப்டம்பர் 13ம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார். அங்கு அவரை வரவேற்க தொண்டர்கள் பெரும் திரளாகக் குவிந்ததால், விஜய் உரையாற்றிய நிகழ்ச்சி பல மணி நேரம் தாமதமானது.
மேலும், கூட்ட நெரிசலால், வெறும் 7 கிமீ தூரம் கடக்கவும், விஜய்க்கு சுமார் 5 மணி நேரம் பிடித்தது.அதன் பின் அரியலூரில் உரையாற்றிய அவர், குன்னம் பகுதியில் வாகனத்தின் மீது நின்று தொண்டர்களை கையசைத்து வாழ்த்தினார்.

ஆனால், பெரம்பலூரில் சென்றபோது நள்ளிரவு ஆகியதால் அங்கு உரையாற்றாமல் நகர்ந்துவிட்டார். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.அதுமட்டுன்றி,ஒரு நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த விஜய், 2 இடங்களில் மட்டுமே உரையாற்ற முடிந்தது.
இதனால் எதிர்காலத்தில் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 மாவட்டங்களில் மட்டுமே பிரசாரம் நடத்த முடிவு செய்துள்ளார்.இந்நிலையில், விஜயின் பரப்புரைக்காக காவலர்களிடம் த.வெ.க. தொண்டர்கள் அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், பல்வேறு இடங்களில் நிபந்தனைகளுடன் மட்டுமே காவலர்கள் அனுமதி வழங்குகிறார்கள்.
இதனை எதிர்த்து, அனுமதிக்கான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் த.வெ.க. சார்பில் தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனுவில், “அனுமதி விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து, டிஜிபி உத்தரவின் அடிப்படையில் காவலர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
English Summary
Vijays campaign permission petition goes trial Chennai High Court Fans eagerly waiting