உள்ளிருந்து பூட்டிய வீடு…! கதவை உடைத்து பார்த்த மனைவிக்கு அதிர்ச்சி...! நடந்தது என்ன...?
house locked from inside wife shocked when she broke door and saw What happened
கன்னியாகுமரியை சேர்ந்த ஜேசு சவுந்தர்யாவை காதலித்து, 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர் தக்கலை ஈத்தவிளை பகுதியை சேர்ந்த 30 வயதான துரைராஜ் .
தற்போது இருவருக்கும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த குடும்பம் முட்டைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தது. மேலும், மனைவி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே, மது பழக்கம் மற்றும் மனைவியிடம் கொண்டிருந்த சந்தேகத்தால் துரைராஜ் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த சவுந்தர்யா, பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து, பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை எடுக்க அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தபோது, கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. அங்குள்ள அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, துரைராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சவுந்தர்யா காவலில் புகார் செய்தார். மேலும், காவகர்கள் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
house locked from inside wife shocked when she broke door and saw What happened