அமித்ஷா ரகசிய சந்திப்புக்கு விளக்கம் கொடுத்த எடப்பாடி...! -பாரத ரத்னா கோரிக்கையா? அல்லது அரசியல் கணக்கு வேறா?
eps explains Amit Shah secret meeting Bharat Ratna request Or political calculation
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (எடப்பாடி பழனிசாமி) நேற்று காலை டெல்லி பயணம் மேற்கொண்டார். அவரது பயணம் முதலில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லுவதற்காகவே என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதியம் அவர் ராதாகிருஷ்ணனை சந்தித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு, தனியார் ஓட்டலுக்கு திரும்பி ஓய்வு எடுத்த எடப்பாடிக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கும் நேரம் கோரப்பட்டது. அதற்கு இரவு 8 மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டது.அந்த நேரம் குறித்தபடி, எடப்பாடி பழனிசாமியுடன், சி.வி. சண்முகம், ஐ.எஸ். இன்பதுரை,அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை,கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன, தனபால் ஆகியோரும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் 3 தனித்தனி கார்களில் கிருஷ்ண மேனன் ரோட்டில் இருக்கும் அமித்ஷா இல்லத்தை நோக்கி புறப்பட்டனர்.

அங்கு நடந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது. இதைத் தொடர்ந்து,எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் சிறிது நேரம் அமித்ஷா இல்ல வளாகத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.முதலில் எம்.பி.க்களும் முன்னாள் அமைச்சர்களும் வெளியேறினர். இறுதியாக இரவு 9 மணியளவில் எடப்பாடி பழனிசாமியும் வெளிவந்தார்.
அதிலும், குறிப்பாக, உள்ளே செல்லும்போது ஒரு காரில் சென்ற எடப்பாடி, வெளியே வரும்போது வேறு காரில் வந்தது நிருபர்களிடையே, சுவாரஸ்யத்தையும் சந்தேகத்தையும் கிளப்பியது. மேலும், வெளியே காத்திருந்த ஊடக நிருபர்களை சந்திக்காமல், கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி விரைந்து கிளம்பினார்.
இதையடுத்து, “அமித்ஷாவை சந்தித்தது எந்த காரணத்திற்காக?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக எழுந்தது. அதற்கான விளக்கத்தை எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது,"மாண்புமிகு இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, தலைமைக் கழக நிர்வாகிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து சந்தித்தோம்.
தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் அளித்து வலியுறுத்தினோம்” என பதிவிட்டார்.
English Summary
eps explains Amit Shah secret meeting Bharat Ratna request Or political calculation