கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு 1½ கிலோ வெள்ளி கொலுசுகள் அணிவிப்பு.!
one and half kg silvar golusu wear to kumbakonam athikumbeswarar temple elephant
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. மகாமகத்துடன் தொடர்புடைய கோவில்களில் முதன்மையான கோவிலாக உள்ள இந்த கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் புகழ் பெற்ற மங்களம் என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் 1½ கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்ட 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மங்களத்தின் இரண்டு முன்னங்கால்களில் புதிய வெள்ளிக்கொலுசுகளை அணிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது கோவில் செயல் அலுவலர் முருகன், மற்றும் யானைப்பாகன் அசோக் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிந்தபடி நின்ற கோவில் யானை மங்களத்தை திரளான பக்தர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
English Summary
one and half kg silvar golusu wear to kumbakonam athikumbeswarar temple elephant