ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் மோசடி செய்து ரூ.4,843 கோடி லாபம்: மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது..? ராகுல்காந்தி கேள்வி..!
Rahul Gandhi asks why the Modi government turned a blind eye when Jane Street was found to have defrauded the Indian stock market and made a profit of Rs 4843 crore
ஜனவரி 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில், ஜேன் ஸ்ட்ரீட் என்ற அமெரிக்க வர்த்தக நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பங்குகள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தைகளில் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டி, குறியீடுகளை கையாண்டு லாபம் ஈட்டியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டறிந்துள்ளது.
இதனால், ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-qgxrz.png)
இந்நிலையில் இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பதிவிட்டுள்ளதாவது: செபி இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தது..? மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது..?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தை பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது. இதனால், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாகவும் 2024-ஆம் ஆண்டிலேயே தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
English Summary
Rahul Gandhi asks why the Modi government turned a blind eye when Jane Street was found to have defrauded the Indian stock market and made a profit of Rs 4843 crore