நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு!
Tomorrow Stalins plan with you District Collector Ranjit Singhs invitation
தேனி மாவட்டம்,உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள முகாம்களுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (08.07.2025) முதல் தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, நகர்புற மற்றும் கிராமப்பகுதி மக்களின்குறைகளை தீர்க்கும் வகையில் ;உங்களுடன் ஸ்டாலின்; என்ற திட்டம் தேனிமாவட்டத்தில் நாளை (08.07.2025) முதல் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் 28முகாம்கள், பேரூராட்சி பகுதிகளில் 21 முகாம்கள், வட்டார ஊராட்சிகளில் 25 முகாம்கள்என 74 முகாம்கள் ஜீலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறஉள்ளது.
எரிசக்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, காவல், மாற்றுத்திறனாளிகள் நலம், வீட்டு வசதி மற்றும்நகர்புற வளர்ச்சி, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை, ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம், கூட்டுறவுஆகிய அரசுத்துறைகள் மூலம் நகர் பகுதிகளில் 13 துறைகளில் 43 சேவைகள், கிராமப்புறங்களில் 15துறையில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெறஇந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைப்பெறதகுதியுள்ளவிடுபட்டமகளிர்யாரேனும்இருப்பின்முகாம்நடைபெறும்நாளன்றுமுகாமிற்குசென்றுதங்கள்விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கானவிண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.இந்த திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாகதெரிவிப்பதற்காக, தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும்தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (08.07.2025) முதல் தொடங்க உள்ளது. அதனைதொடர்ந்து 15.07.2025 முதல் முகாம்கள்நடைபெறவுள்ளது.இந்தமுகாம்களில்பெறப்படும்விண்ணப்பங்கள்மீது45நாட்களில்உரியநடவடிக்கைமேற்கொள்ளப்படும்.உங்களுடன் ஸ்டாலின்; திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள்கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
English Summary
Tomorrow Stalins plan with you District Collector Ranjit Singhs invitation