எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது - நிச்சயமான பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மௌ மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதையறிந்த அந்த இளம்பெண்ணின் காதலன் ராம் ஜனம் சிங் படேல் மனமுடைந்து கோபத்துடன் இருந்துள்ளார்.

இந்தநிலையில், அந்த இளம்பெண் நேற்று வங்கிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ராம் காதலி மீது ஆசிட்டை ஊற்றி விட்டு, "நீ எனக்கு கிடைக்காவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க கூடாது" என்று கூறி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.

இதில் பெண்ணின் முகம், தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வழியால் அலறித் துடித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அந்த பெண்ணின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் ராம் ஜனம் சிங் படேல் மற்றும் அவரது நண்பர் இருவரையும் கைது செய்தனர். காயமடைந்த பெண்ணுக்கு மே 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples arrested for acid throw on women in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->