வரதட்சணை கொடுக்கமாட்ட.. உன் கூட வாழணுமா?.. முத்தலாக் கூறி முடித்து வைத்த கணவன்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் டி.ஜெ.ஹள்ளி பகுதியை சார்ந்தவர் முகமது தாரிக். இவர் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து, 26 வயது மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துள்ளனர். 

காதல் திருமணமாக இருந்தாலும், கார் வரதட்சணையாக கொடுக்க கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பெண் வீட்டாரும் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் கூறிய நிலையில், பெண் வீட்டாரால் காரை கொடுக்க இயலவில்லை. 

இதனால் முகமது தாரிக் அவ்வப்போது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளான். இதன் காரணமாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

மேலும், முகமது தாரிக்கின் மனைவி, தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்ற நிலையில், இருதரப்பிலும் சமாதானம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. பின்னர் முகமது தாரிக்கின் மனைவி நாம் சேர்ந்து வாழலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பவே, நான் உன்னுடன் வாழமாட்டேன் என்று முத்தலாக் கூறி பதில் அனுப்பியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், முகமது தாரிக்கின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Husband arrest by police in Bangalore due to dowry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->