ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. சரக்கு ரயிலின் சக்கரம் ஏறி 6 பேர் உயிரிழப்பு..!!
6 killed in goods train wheel in odisha
ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வாரம் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் மேலும் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் மழை பெய்ததால் அங்கிருந்த சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியுள்ளனர். இதை கவனிக்காத ரயில் ஓட்டுநர் ரயிலை இயக்கியதால் ரயிலின் சக்கரம் ஏறி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
6 killed in goods train wheel in odisha