உத்தரபிரதேசத்தில் தொடர் கனமழையால் 12 பேர் உயிரழப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் சராசரியாக 28.6 மிமீ கனமழை பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக உத்தரபிரதேச மாநிலத்த்தில்  தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் சராசரியாக 28.6 மிமீ கனமழை பதிவாகியுள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தம் 75 மாவட்டங்கள் உள்ளன அதில் 51 மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. இதன்படி ஹத்ராஸ் மாவட்டத்தில் மழை அதிகபட்சமாக 185.1 மிமீ பதிவாகியுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு 31 வீடுகள் பகுதியளவில் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் கனமழை தொடர்பான சம்பவங்களில் 12 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மைன்புரியில் 5 பேரும், மதுராவில் 2 பேரும் இந்த கனமழை காரணமாக உயிரிழந்ததாக உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமீபத்தில் பெய்த தொடர் மழையைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் 24 மணி நேரமும் அதிக மழை பொழியும் மாவட்டங்களை  கண்காணித்து வருகின்றனர். மேலும், அதிகாரி ஒருவர் தேவைக்கேற்ப மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 people died due to continuous heavy rains in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->