சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கடுமையான எரிச்சல் மற்றும் வலியை குறைப்பதற்கு எளிய முறையிலான ஆலோசனைகள்.!!
when pissing you have heavy pain to use this technique to avoid problem
இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் நடைமுறைகளின் காரணமாகவும்., வெயிலின் தாக்கத்தாலும் சிறுநீர் கழிக்கும் சமயத்தில் வலி மற்றும் கடுமையான எரிச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக சிறுநீர் வருவது போல தோன்றினாலும் சிறுநீரை கழிக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலுக்கு தொற்றுகளின் காரணம் என்று முழுமையாக கூற இயலாது., சில மாற்று காரணங்களும் உள்ளது. உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்திலும்., உடல் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும் சில எளிய முறைகள் உள்ளது. அவை குறித்து இனி காண்போம்.

யூரிக் அமிலத்தின் அளவானது அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆப்பிள் சாறு அல்லது ஆப்பிள் பழத்தை சாப்பிடலாம். ஆப்பிளில் இருக்கும் மாலிக் அமிலம் மற்றும் பைப்பரின் காரணமாக நமது உடலில் இருக்கும் தேவையற்ற யூரிக் அமிலத்தின் அளவானது குறைகிறது.
யூரிக் அமிலத்தின் அளவானது அதிகமாக இருக்கும் பச்சடிஹல் செர்ரி பலத்தை சாப்பிடலாம். செர்ரி பழத்தில் இருக்கும் ஆன்தோசியனின் சத்து மூலமாக தேவையற்ற அமிலத்தின் அளவானது குறைகிறது. மேலும்., எலும்புகளில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கிறது.

இதுமட்டுமல்லாது பச்சையான வெங்காய சாறு., வெள்ளரி பழம்., ஆப்பிள் சீடர் வினிகர்., பீன்ஸ் காயை உணவில் சேர்த்து கொள்ளுதல்., தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து சாப்பிட்டு வருதல்., வைட்டமின் சி சத்துக்களை கொண்ட பொருட்களை அதிகளவில் சாப்பிடுவது மூலமாக உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக ஒமேகா 3 கொண்ட மீன் வகைகளான சாலமன் மீன்., மாக்கிரஸ் மீன்., வால்டன்ட்., ஆளி விதைகள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலமாகவும்., க்ரீன் தேநீர் மற்றும் செலரி விதைகள்., நார்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிடுதல்., தக்காளி பழத்தை சாப்பிடுதல் மூலமாக உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவானது வெகுவாக குறையும்.

அதிகளவு நீர் பருகுதல் மற்றும் உடலுக்கு நீர் சத்துக்களை அதிகளவு வழங்கும் உணவு மற்றும் பழங்களை சாப்பிடுதல்., வாழைப்பழம் சாப்பிடுதல்., கொழுப்புகள் குறைந்த அளவுள்ள உணவுகளை சாப்பிடுதல்., போன்றவற்றின் மூலமாக நமது உடலை யூரிக் அமிலத்தின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். மேலும்., இந்த குறிப்புகளில் உள்ள எந்த பொருளையும் அளவுக்கு அதிகமாக உண்ணும் வழக்கத்தை வைக்க கூடாது., மருந்து பொருள் என்றாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்து., தினமும் தேவையான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். ஒரே நாளில் எந்த பிரச்சனையும் சரியாகாது என்பதை நினைவில் வைப்பது நல்லது.
English Summary
when pissing you have heavy pain to use this technique to avoid problem