‘கூலி’ திரைப்பட ரசிகர்கள் காட்சிக்கு கட்டண கொள்ளை - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Rajini Colli movie ticket Kumbakonam
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கும்பகோணம் பகுதியில், இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் விலை ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அங்கு உள்ள ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக, சிறப்புக் காட்சிகளுக்கான விலை ரூ.190 அல்லது ரூ.200 ஆக நிர்ணயிக்கப்படும் நிலையில், கூடுதல் தொகை வசூலிப்பது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
இதை எதிர்த்து, கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றம் நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ரசிகர் மன்ற ஒன்றியச் செயலாளர் இன்பராஜ் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ ரஜினிக்காக மட்டும் ஒன்றிணைந்துள்ளோம். தற்போது, கும்பகோணத்தில் உள்ள 3 தியேட்டர்களில் கூலி வெளியாகிறது.
சிறப்புக் காட்சிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி ரூ.400 வசூலிக்கின்றனர். காரணம் கேட்டபோது, விநியோகஸ்தர்களின் உத்தரவாகவே இது நடக்கிறது என தெரிவித்தனர். இது ரசிகர்களை மனவேதனைக்குள்ளாக்குகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.
English Summary
Rajini Colli movie ticket Kumbakonam