என்ன இது பித்தலாட்டம்! என்ன ஓட்டு போட உள்ள விடல...! - நடிகை ரவீனா தாஹா
What madness What reason for voting Actress Raveena Thaha
சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தொடங்கி உள்ளது. இதில் 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.
முக்கியமாக சிவன் சீனிவாசன்,தினேஷ், பரத் ஆகிய 3 பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் big boss புகழ் ''ஆர்த்தி கணேஷ்கர்''.

இந்த தேர்தலில் நடிகர்கள் மற்றும் உறுப்பினர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகை ரவீனா தாஹா அவர்கள்,"சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தன்னை வாக்களிக்க விடவில்லை" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
நடிகை ரவீனா தாஹா:
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''ரெட் கார்ட்' வழங்கப் பட்டிருப்பதால் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க விடவில்லை. `ரெட் கார்ட்' இருந்தால் போட்டியிடதான் முடியாது, வாக்களிக்கலாம் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது என்னுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது''என்று வருந்துகிறார்.
English Summary
What madness What reason for voting Actress Raveena Thaha