நெஞ்சு சளியை போக்கும் நண்டு ரசம்.!!
nandu rasam recepie
நண்டு ரசம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
நண்டு
வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
மிளகு
காய்ந்த மிளகாய்
சோம்பு
சீரகம்
எண்ணெய்
பச்சை மிளகாய்
உப்பு
தனியா
செய்முறை
முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு சுருள வதங்கியவுடன் நண்டு, பச்சை மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இதனுடன் சீரகம், மிளகு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு இடித்து நண்டு கலவையுடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான நண்டு ரசம் தயார்.