இந்தோனேஷியாவில் கப்பலில் வெடித்து சிதறிய பாமாயில் டேங்கர்; 10 பேர் பலி, 21 பேர் படுகாயம்..!
10 killed as palm oil tanker explodes off Indonesia coast
இந்தோனேஷியாவில் பாமாயில்யில் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து படாம் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்டுள்ளது.
ரியாவு தீவில் உள்ள படாம் நகரில் இருந்த கப்பல் கட்டும் தளத்தில் பாமாயில் டாங்கருடன் வந்த கப்பலில் பராமரிப்பு பணி நடந்தது. அப்போது, டாங்கரில் பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது அங்கு தீவிபத்து ஏற்பட்டு. டேங்கர் வெடித்துச் சிதறியுள்ளது.
இதன் காரணமாக, அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
English Summary
10 killed as palm oil tanker explodes off Indonesia coast