முன்பதிவிலேயே 50 கோடி வசூல் - மாஸ் காட்டும் கூலி படம்.!!
coolie movie 50 crores collected for ticket booking
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினியுடன் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடியாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
coolie movie 50 crores collected for ticket booking