தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 54 அரியவகை விலங்குகள்: மும்பை விமான நிலையத்தில் மீட்பு..!
54 rare animals smuggled from Thailand recovered at Mumbai airport
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் அரியவகை உயிரினங்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, சுங்க அதிகாரிகள் குறித்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, ஷாருக்கான் முகமது ஹூசேன் என்ற பயணியின் டிராலி பேக்குகளை அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை செய்தனர். அதில் உயிருடன் அரியவகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, தேன் கரடி என அழைக்கப்படும் 02 கிங்காஜூ, உலகிலேயே சிறிய அளவிலான குரங்கு இனத்தை சேர்ந்த 02 குள்ள மார்மோசெட், 50 சிவப்பு காது அரியவகை ஆமைகள் ஆகியவை இருந்துள்ளதை பார்த்து சுங்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது, குறித்த அரிய வெளிநாட்டு விலங்கினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உயிருடன் 54 விலங்குகளை திருட்டுத்தனமாக கடத்தி வந்த ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு செய்தது, அவர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மீட்கப்பட்ட வெளிநாட்டு விலங்கினங்களை பாங்காக்கிற்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
54 rare animals smuggled from Thailand recovered at Mumbai airport