ரகசிய உறவு ... குழந்தை பெற்றெடுத்த கல்லூரி மாணவி!
Secret relationship college student who had a child
கல்லூரி மாணவி ஒருவர் மாணவரை காதலித்து இருவரும் ரகசிய திருமணமும் செய்து கொண்டு உல்லாசத்திலும் ஈடுபட்டனர்.
சேலத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஊட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்து வந்தார் . அப்போது அவரோடு படித்த வந்த மாணவரை காதலித்து இருவரும் ரகசிய திருமணமும் செய்து கொண்டு உல்லாசத்திலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஈடுபட்ட உறவில் அந்த மாணவி கர்ப்பமானார். கர்ப்பத்தை வயிற்றில் சுமந்தபடி அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்தாா். அவரது ரகசிய காதல் கணவரும் சென்னையில் வந்து குடியேறினார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாவதை கண்டு சக மாணவிகள் சந்தேகத்துடன் பார்த்தனர். இந்தநிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பெற்ற மாணவி காதலனுக்கு தகவல் கொடுத்தார். காதலனும் குழந்தையோடு மாணவியை திருவல்லிக்கேணி பகுதிக்கு அழைத்து வந்து ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கினார்கள்.

பின்னர் இருவரும் சேர்ந்து குழந்தையை ஒரு கட்டைப்பையில் போட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று குழந்தையை பையோடு நைசாக தூக்கிபோட்டுவிட்டு தப்பியோட பார்த்தனர். அப்போது காவல் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அவர்கள் இருவரையும் சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரித்தார்.விசாரணையில், அவர்கள் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். குழந்தை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. மாணவியை அவர் தங்கி இருந்த விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
காதலன் கோர்ட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Secret relationship college student who had a child